'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் 'கனவுக் கோயில்தான்'. அதன் அடிப்படையிலேயே நாங்கள் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு "எங்கள் கனவு! - எங்கள் பள்ளி!!", எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும், புதிய சிந்தனையையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி." வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வழிக் கல்வி !!
OUR SCHOOL! OUR DREAM!!
இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம். இன்றைய தினம் நம் பள்ளியில் 62 வது குடியரசு தினவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. இரகு அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. லோகநாதன் உள்ளிட்ட பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டார அரிமா சங்கத்தைச் ( LION'S CLUB ) சார்ந்த தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. V.சுஜாதா அவர்கள் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றார். அச்சமயம் கிராம பெரியவர்கள் , இளைஞர்கள் , பெற்றோர்கள் , பள்ளி ஆர்வலர்கள் ,
நம் பள்ளி பிள்ளைகள் முதலியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
குடியரசு தின விழா விருந்தினர்களை கௌரவித்தல் ! !!
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்!
வயலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. குமார் ( பள்ளி ஆர்வலர் ) அவர்களால் வழங்கப்பட்ட "தமிழ்-ஆங்கில அகராதி” ( TAMIL - ENGLISH DICTIONERY ) நம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வயலூர் அகரம் மூலம் மாணவர்களுக்கு 62வது குடியரசு தினத்தன்று (26.01.2011) வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்!
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுகள் வழங்குதல்!
மகளிர் சுய உதவிக் குழுவினர் நன்கொடை வழங்குதல்!,.
Subscribe to:
Posts (Atom)

















































