P.U.P.SCHOOL, PERAMBAKKAM. KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT. TAMILNADU. INDIA.

ஆங்கிலம் பேசுவது எப்படி!

ஆங்கிலப் பெயர்சொற்குறிகள் (Articles).

"பெயர்சொற்குறிகள்" என்பவை பெயர்ச்சொற்களுக்கு முன்பாக குறிப்பிட்டு அல்லது சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களாகும். இதனை சுட்டிடைச்சொற்கள் என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்குறிகள் மூன்று மட்டுமே உள்ளன.
the, a, an
அவற்றை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Definite Article – நிச்சயப் பெயர்சொற்குறி.
Indefinite Articles – நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள்.


நிச்சயப் பெயர்சொற்குறி (Define Article)


ஆங்கிலத்தில் நிச்சயப் பெயர்ச்சொற்குறி ஒன்று மட்டுமே உள்ளது.
The
யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு பேசப் பயன்படும் சொல் “நிச்சயப் பெயர்சொற்குறி” சொல்லாகும். தமிழில் “அந்த, இந்த” என்று குறித்துப் பேசுவதற்கு இணையானப் பயன்பாடாகும். இச்சொல் (The) எப்பொழுதும் பெயர்ச்சொற்களுக்கு முன்பாக மட்டுமே பயன்படும். இச்சொல் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஒருவரை அல்லது குறிப்பிடப்பட்ட பொருளை குறித்துப்பேசவும் பயன்படும்.
எடுத்துக்காட்டு:
The car.
(அந்த/இந்த) மகிழூந்து
The book.
(அந்த/இந்த) பொத்தகம்
The beautiful girl
(அந்த/இந்த) அழகானப் பெண்.
நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் (Indefinite Articles)
நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் எப்பொழுதும் எந்த ஒரு நபரையும் எந்த ஒரு பொருளையும்; இவர்தான் (அவர்/இவர்), இதுதான் (அந்த/இந்த) என்று நிச்சயித்து குறிப்பிட பயன்படுவதில்லை. அதாவது ஒரு நபர் அல்லது பொருள்; யார், எது என தெரியாதப் பொழுது அல்லது குறிப்பிட்டு கூறாமல் தவிர்க்கும் பொருட்டு, பொதுப்படையாக ஓர் ஒரு என நிச்சயமற்ற பெயர்சொற்குறிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.


நிச்சயமற்ற பெயர்சொற்குறிகள் ஆங்கிலத்தில் இரண்டு மட்டுமே உள்ளன.
a
an
எடுத்துக்காட்டு:
a car - ஒரு மகிழூந்து
(ஏதோ ஒரு மகிழூந்து, எந்த மகிழூந்து என்று நிச்சயித்து அல்லது குறிப்பிட்டு கூறப்படவில்லை)
a book - ஒரு பொத்தகம்


(எந்த பொத்தகம் என்று குறிப்பிடவில்லை. ஏதோ ஒரு பொத்தகம்)


a beautiful girl - ஒரு அழகானப் பெண்


(எந்தப் பெண் என்று குறிப்பிடப்படவில்லை)


He is an Indian - அவன் ஒரு இந்தியன்.


(இந்தியக் குடியுரிமை கொண்ட ஒருவன்)


குறிப்பு:
1. ஒரு சொல்லின் முதல் எழுத்து மெய்யெழுத்தானால், அதற்கு முன்பாக "ஓர், ஒரு" என்று குறிக்க "a" பயன்படும். ஒரு சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்துத்தென்றால், அதற்கு முன்பாக "ஓர், ஒரு" என்று குறிக்க "an" பயன்படும். விதிவிலக்கானவைகளும் உள்ளன. அவற்றை தொடர்புடைய பாடத்தில் பார்க்கவும். (Use a/an - Vowels and Consonant)
2. Define Article என்பதை Define Articles என்று “s” இட்டு பன்மையாக எழுதுவது பொருத்தமற்றது. காரணம் Define Article ஒன்று மட்டுமே உள்ளது. (The)


Article சொல்விளக்கம்.


"Article" எனும் ஆங்கிலச்சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படும். அத்துடன் "பெயர்சொற்குறி" எனும் பொருளைத் தவிர வேறு சில பொருற்களும் உள்ளன.
Article: பெயர்சொற்குறி (சுட்டிடைச்சொல்)
Article: உடன்படிக்கை. (ஆவண உடன்படிக்கை)
article: உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்து (வினை)
Article: கட்டுரை, செய்தித்தாளின் வெளியான ஒரு பொருள்.
========================================================================

முன்னிடைச்சொற்கள் அட்டவணை.
(List of Propositions)



முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கானவை உள்ளன. இங்கே அடிக்கடி பயன்படும் முன்னிடைச்சொற்கள் 70 அட்டவணை படுத்தப்பட்டுள்ளன.

உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

List of Prepositions...


No: English தமிழ்


1 aboard   கப்பலில்/வானூர்தியில்
2 about   கிட்டத்தட்ட/ sb,sth பற்றி/சுற்றிலும்
3 above   மேலே/ உயர
4 across   குறுக்கே
5 after   பின்னால்/அடுத்து
6 against   எதிராக
7 along   நீள்வட்டத்தில்/ நெடுக
8 amid   மத்தியில்/ இடையில்
9 among   நடுவில்/பலவற்றிற்கு இடையே
10 anti   எதிரான
11 around   சுற்றிலும்/ சூழ்ந்து
12 as   அதே அளவில்/அதே மாதிரி/ அப்படியே
13 at   இல்/ ...ளவில்
14 before   முன்னால்/ஏற்கெனவே
15 behind   பின்னால்
16 below   கீழே/ அடியில்
17 beneath   கீழே/அடியில்
18 beside   அருகில்/பக்கத்தில்
19 besides   மேலும்/...ஐத் தவிர/கூடவும்
20 between   (இரண்டுக்கு) இடையில்/நடுவே
21 beyond   அப்பால்/அப்புறம்
22 but   ஆனால்
23 by   ஆல்/அருகில்
24 concerning   அக்கறையுடன்/கவலையுடன்
25 considering   ஆழ்ந்து எண்ணுகின்ற/கருதுகின்ற
26 despite   ஆனபோதிலும்/ஆயினும்/இருப்பினும்
27 down   கீழே
28 during ..  காலத்தில்/...பொழுது
29 except   தவிர
30 excepting   தவிர/நீங்கலாக
31 excluding   விலக்குகின்ற/தவிர்க்கின்ற
32 following   ஆதரிக்கின்ற/அடுத்துவருகின்ற
33 for   பதிலாக/...க்காக/...கு
34 from ...  இருந்து
35 in   உள்/இல்/இடத்தில்
36 inside   உள்பக்கம்/உட்புற
37 into   உள்ளுக்குள்/உள்நோக்கி
38 like   போன்ற/ஒத்த
39 minus   கழித்தல்/குறைத்த/நீக்கிய
40 near   அருகில்
41 of ..  உடைய/...இல்/...இன்
42 off   அணை/மூடு/அப்பால்
43 on   மேலே/மீது/இல்
44 onto   அதனுள்
45 opposite   எதிரான/எதிர்புறம்
46 outside   வெளிப்புறம்
47 over   மேலே/முடியும் தருவாயில்
48 past   கடந்த/கடந்த காலம்
49 per   ஆக/ஒன்றிற்கு
50 plus ...  ஓடு/...கூட
51 regarding   சம்பந்தமாக/..ஐப் பற்றி/...ஐக் குறித்து
52 round   வட்டமான
53 since   அப்பொழுதிலிருந்து/இருந்து
54 than   பார்க்கிலும்/விட
55 through   ஊடே/வழியாக/மூலமாக
56 to   ...க்கு/இடத்திற்கு
57 toward   நோக்கி/திக்காக
58 towards   நோக்கி
59 under   அடியில்/கீழே
60 underneath    அடியில்/கீழே
61 unlike   போலில்லாத/ஒவ்வாத
62 until   வரை/வரைக்கும்/மட்டும்
63 up   மீது/மேலே
64 upon   மீது/மேல்
65 versus   எதிராக
66 via   வழியாக
67 with   உடன்
68 within   அதற்குள்/அத்துடன்
69 without   இல்லாமல்/இன்றி
70 throughout   முற்றிலும்/எங்கணும்.
========================================================================