இன்று நம் கடம்பத்தூர் ஒன்றிய வட்டார மேற்பார்வையாளர் திருமதி.P.கலாவதி B.Sc,.M.Ed,. அவர்கள் நம் பள்ளியை பார்வையிட்டார்கள், அச்சமயம் நம் பள்ளியில் செயல் வழிக் கற்றல் முறை (A.B.L. METHOD) மற்றும் எளிய படைப்பாற்றல் வழிக்கற்றல் ( S.A.L.M METHOD ) முறையில் மாணவர்கள் நன்முறையில் பாடம் கற்பதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் உள்ள அட்டைகளை படிக்கச் செய்து விளக்கக் கூறினார் , நம் பள்ளி மாணவர்கள் அச்செயல்பாட்டினை விளக்கி கூறி பாராட்டினைப் பெற்றனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்களை தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை படிக்கச் செய்து அவர்களின் வாசித்தல் திறனை அறிந்து மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தார். நம் பள்ளிக்கு "இந்தியன் வங்கி "தலைமை அலுவலகம் ( சென்னை 600 001 ) மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வழங்கிய இரண்டு ( 2 ) பயன்படுத்தப்பட்ட கணினிகளை ( USED COMPUTERS ) கண்டு தலைமை ஆசிரியை திருமதி. V.சுஜாதா அவர்களிடத்தில் கடம்பத்தூர் ஒன்றிய வட்டார மேற்பார்வையாளர் திருமதி.P.கலாவதி B.Sc,.M.Ed,. அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார் ! 





















1 comment:
வாழ்த்துக்கள்.தங்களின் பணி தொடரட்டும்.
Post a Comment