இன்று (23.07.2010) நம் பள்ளியில் கிராம கல்விக் குழு தினம் (V.E.C. DAY)கொண்டாடப்பட்டது , அச்சமயம் கிராம கல்விக் குழுத் தலைவர் திரு.இரகு உட்பட பெற்றோர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். நம் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.V.சுஜாதா அவர்கள் அனைவரையும் வரவேற்று இன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பின் செயல் வழிக் கற்றல் மூலம் மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள கல்வி அடைவினை பெற்றோர் முன் இன்றைய தின தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை வாசித்து காட்டி வெளிப்படுத்தினர், 2 மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் A.B.L. ஆங்கில அட்டையில் உள்ள வாக்கியங்களை ( SENTENCES ) நன்கு வாசித்து காட்டினர் , அதன் பின் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆங்கில புத்தகத்தை வாசித்து காட்டி பாராட்டுப் பெற்றனர் . இந்நிகழ்வின் போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக (P.T.A. PRESIDENT ) மாணவன் செல்வன் L.கண்மணிச்செல்வன் அவர்களின் தந்தை திரு. லோகநாதன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
2009- 2010 ஆம் கல்வி ஆண்டில் கல்வி தர வரிசையில் 5-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மணிகளுக்கு வயலூர் அகரம் கிராமத்தை சார்ந்த திரு. பட்டாபிராமன் & திருமதி. ஜானகியம்மாள் அவர்கள் வழங்கிய ரூ.2000-/ மாணவ மணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் (1),செல்வி. கு. திவ்யா. ( முதல் பரிசு ரூ.700-/) , (2), செல்வி.ச. நிஷாந்தி . (இரண்டாம் பரிசு ரூ.650-/) , (3), செல்வி.த.நித்யா (இரண்டாம் பரிசு ரூ.650-/) .


No comments:
Post a Comment